India's Virat Kohli , right, and India's Rohit Sharma give the fist after scoring runs during the first One Day International match between India and South Africa in Ranchi,
ரோஹித் சர்மா , விராட் கோலி. படம்: ஏபி

ரோஹித் - கோலி புதிய சாதனை..! அதிரடி தொடக்கத்தால் இந்திய ரசிகர்கள் உற்சாகம்!

ரோஹித் சர்மா - விராட் கோலியின் சாதனை குறித்து...
Published on

இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா - விராட் கோலி இணைந்து இந்தியாவிற்காக அதிக போட்டிகள் விளையாடிவர்களாக சாதனை படைத்துள்ளார்கள்.

இதற்கு முன்பாக சச்சின் - டிராவிட் 391 போட்டிகளில் விளையாடி இருந்தார்கள்.

எம்.எஸ்.தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்க ரோஹித் - கோலி சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

தற்போது 12 ஓவர் முடிவில் இந்திய அணி 94/ 1 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 27, கோலி 37 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.

அதிகமான போட்டிகளில் இணைந்து விளையாடியவர்கள்

1. ரோஹித் சர்மா - விராட் கோலி - 392

2. சச்சின் - டிராவிட் - 391

ரோஹித் சர்மா 277 போட்டிகளில் 11, 392 ரன்களும் விராட் கோலி 306 போட்டிகளில் 14, 291 ரன்களும் எடுத்துள்ளார்கள்.

Summary

Indian players Rohit Sharma and Virat Kohli have jointly set the record for playing the most matches for India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com