டி20-ல் புது வரலாறு..! தரவரிசையில் சாதனையுடன் முதலிடத்தில் அபிஷேக் சர்மா!

931 புள்ளிகளுடன் முதலிடத்தில் அபிஷேக் சர்மா தொடரும் இந்திய வீரர் அபிஷேக் சர்மாவைப் பற்றி...
அபிஷேக் சர்மா...
அபிஷேக் சர்மா...
Published on
Updated on
1 min read

ஐசிசி டி20 தரவரிசையில் முதல்முறையாக அதிகபட்ச புள்ளிகளை (931) எட்டிய முதல் வீரர் என்ற உலகச் சாதனையை இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா பெற்றுள்ளார்.

சர்வதேச டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளின் தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமைகளில் வெளியிடப்படுகிறது. அதன்படி, இந்த வாரத்துக்காக டி20 தரவரிசைப் பட்டியல் இன்று (அக்.1) வெளியிடப்பட்டது.

ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா, முதல் முறையாக ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் 900 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்திருந்தார்.

கடந்த வாரம் 907 புள்ளிகளை எட்டியிருந்த அபிஷேக் சர்மா, தொடர்ச்சியாக 3 அரைசதங்கள் விளாசியதன் மூலம் டேவிட் மாலன் (919), இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் விராட் கோலி (909), சூர்யகுமார் யாதவ் (912) ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முதல்முறையாக 931 புள்ளிகளை எட்டி உலகச் சாதனையைப் படைத்துள்ளார்.

ஆசியக் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடிய 25 வயதான அபிஷேக் சர்மா 44.85 சராசரியுடன் மொத்தம் 314 ரன்கள் எடுத்து தொடர் நாயகனுக்கான காரையும் பரிசாக வென்றார்.

அவரைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய இலங்கை வீரர் பதும் நிஷங்கா ஆசியக் கோப்பையில் மொத்தமாக 261 ரன்கள் எடுத்திருந்தார். இதன்மூலம், இரண்டு இடங்கள் முன்னேறி 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

டி20 தரவரிசைப் பட்டியல்

  1. அபிஷேக் சர்மா - 931 புள்ளிகள்

  2. பில் சால்ட் - 844 புள்ளிகள்

  3. திலக் வர்மா - 819 புள்ளிகள்

  4. ஜோஸ் பட்லர் - 785 புள்ளிகள்

  5. பதும் நிஷங்கா - 779 புள்ளிகள்

  6. டிராவிஸ் ஹெட் - 771 புள்ளிகள்

  7. டிம் செய்ஃபெட் - 725 புள்ளிகள்

  8. சூர்யகுமார் யாதவ் - 698 புள்ளிகள்

  9. குஷல் பெரெரா - 692

  10. டிம் டேவிட் - 676 புள்ளிகள்

அபிஷேக் சர்மா...
இந்தியாவிடம் ஆசியக் கோப்பை ஒப்படைக்க பாகிஸ்தான் அமைச்சர் நிபந்தனை!
Summary

Abhishek Sharma sets new RECORD after Asia Cup 2025 final, become first batter ever to…

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com