
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாதில் இன்று (அக்டோபர் 2) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதல் இன்னிங்ஸில் 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
கே.எல்.ராகுல் அரைசதம்
மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இருப்பினும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 54 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். சாய் சுதர்சன் 7 ரன்களில் ஆட்டமிழக்க, கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் ஜோடி சேர்ந்தனர்.
இந்த இணை நிதானமாக விளையாடி ரன்கள் குவித்து வருகிறது. நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் அரைசதம் கடந்து அசத்தினார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேடன் சீல்ஸ் மற்றும் கேப்டன் ராஸ்டன் சேஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
கே.எல்.ராகுல் 53 ரன்களுடனும், கேப்டன் ஷுப்மன் கில் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.