
இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட சச்சின் டெண்டுல்கர், ஸ்டீவ் ஸ்மித் உதவினார்கள் என இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.
இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என சமன்படுத்தியது.
முதன்முதலாக இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ஷுப்மன் கில் இங்கிலாந்து தொடரில் 754 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இந்தத் தொடரில் சிறப்பாக விளையாட உதவியவர்கள் குறித்து அவர் பேசியதாவது:
இந்தியாவுக்கு வெளியே சரியாக விளையாடாதது சிறிது அழுத்தமாக இருந்தது. இருப்பினும், என்னுடைய பயிற்சியினாலும் எந்த இடத்தில் களமிறங்குவேன் எனத் தெரிந்ததாலும் எனக்கு மனதளவில் நம்பிக்கை இருந்தது.
சச்சின் சாரிடம் பேசினேன். மேத்திவ் வேட் இடமிருந்து ஸ்டீவ் ஸ்மித் அலைபேசி எண்ணையும் வாங்கினேன். இருவருமே என்னிடம் நேராக டிஃபெண்ட் செய்; ஸ்கொயர் பகுதியில் ரன்களை குவிக்க வேண்டும் என்றனர்.
சச்சின், ஸ்மித் இருவரும் வித்தியாசமான பேட்டர்கள். இருப்பினும் இருவரது அடிப்படையும் ஒன்றாக இருப்பதாக கில் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.