பாகிஸ்தான் வீரர்களிடம் போதிய திறமை இல்லை! - இந்திய முன்னாள் கேப்டன்

பாகிஸ்தான் வீரர்களிடம் போதிய திறமை இல்லை என இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளதைப் பற்றி...
Pakistan players celebrate after taking a wicket.
பாகிஸ்தான் வீரர்கள். படம்: ஐசிசி
Updated on
1 min read

பாகிஸ்தான் அணியில் 80 - 90 காலகட்டத்தில் இருந்த வீரர்களைப் போன்று திறமையான வீரர்கள் தற்போது இல்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது; விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும் என இந்திய அணிக்காக முதல் உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆசியக் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 9-வது முறையாகக் கோப்பையை வென்றது.

இந்தத் தொடரில் பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்குவதைத் தவிர்த்தனர்.

மேலும், ஆசிய கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை - விளையாட்டுத் துறை அமைச்சர் மோஷின் நக்வியின் கைகளில் இருந்து கோப்பையைப் பெறுவதை மறுத்தனர்.

முன்னதாக, பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ரௌஃப் மற்றும் சாஹிப்ஸாதா உள்ளிட்டோரும் விமான விபத்து, துப்பாக்கியால் சுடுவது போன்று சைகை காட்டியதற்காக அபராதமும் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறுகையில், “நான் சொல்ல வருவது என்னவென்றால், உங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. அனைத்து ஊடகங்களும் பொறுப்பு இருக்கிறது. கிரிக்கெட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அரசியல் நோக்கத்தோடு பார்க்கக் கூடாது.

அனைத்து ஊடகங்களும் அனைத்து விஷயங்களையும் வெளியே கொண்டுவருவது அவர்கள் கடமை. ஆனால், விளையாட்டு வீரராக நான் விளையாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

80, 90 களில் இருந்த திறமை தற்போதுள்ள பாகிஸ்தான் வீரர்களிடம் இல்லை. அப்போதெல்லாம், பாகிஸ்தான் அணியில் மிகவும் திறமையான வீரர்கள் இருந்தனர். இம்ரான் கான், ஜாவேத் மியாண்டாட், ஜாகீர் அப்பாஸ், வாஷிம் அக்ரம், வாக்கர் யூனிஸ் உள்ளிட்டோரும் மிகவும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அந்தத் திறமையை காண்பித்துள்ளனர். ஆனால், அதுபோன்ற திறமையைத் தற்போதைய பாகிஸ்தான் அணியில் காணமுடியவில்லை” எனத் தெரிவித்தார்.

Summary

Stick to sports: Kapil Dev opens up on India-Pakistan controversy in Asia Cup

Pakistan players celebrate after taking a wicket.
ஐஎல்டி20 ஏலத்தில் விலைபோகாத அஸ்வின்.. பிபிஎல் தொடர் முழுவதும் விளையாட முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com