
ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நாடுகளான ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய அணிகள் அடுத்தாண்டு நடைபெறும் டி20 உலக்கோப்பைக்குத் தகுதிபெற்றுள்ளன.
2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. 2024 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற தொடர் போலவே இந்தத் தொடருக்கும் மொத்தமாக 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்படவுள்ளன.
இந்தத் தொடருக்கு டி20 தரவரிசைப் பட்டியலில் உள்ள முதல் 8 அணிகள் நேரடியாகத் தகுதிபெறும். மற்ற அணிகள் குவாலிஃபையர் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் தகுதி பெறும்.
அந்த வகையில், ஜிம்பாப்வே தனது கடைசி நான்கு போட்டிகளில் கென்யா மற்றும் தான்சானியா அணிகளை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது. அதேபோல, நமீபியா அணியும் தகுதிபெற்றுள்ளது.
அமெரிக்க பகுதியில் இருந்து கனடாவும் ஐரோப்பிய பகுதிகளில் இருந்து நெதர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய அணிகளும் தகுதிபெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.