பலத்த மழையால் கொழும்பு பிரேமதாஸா மைதானத்தில் மூடப்பட்டிருந்த பிட்ச்.
பலத்த மழையால் கொழும்பு பிரேமதாஸா மைதானத்தில் மூடப்பட்டிருந்த பிட்ச்.

மழை ஆடியதால் ஆஸி.-இலங்கை ஆட்டம் ரத்து!

பலத்த மழை எதிரொலியாக இலங்கை-ஆஸ்திரேலிய மகளிா் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் உலகக் கோப்பை ஆட்டம் கைவிடப்பட்டது.
Published on

பலத்த மழை எதிரொலியாக இலங்கை-ஆஸ்திரேலிய மகளிா் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் உலகக் கோப்பை ஆட்டம் கைவிடப்பட்டது.

ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இலங்கை தலைநகா் கொழும்புவிலும் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் சனிக்கிழமை நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-இலங்கை இடையிலான ஆட்டம் பிரேமதாஸா மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பலத்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாத நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது. இரு அணி வீராங்கனைகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட ஆட்டத்துக்கு தயாராக இருந்தனா்.

ஆனால் மழை பெய்யத் தொடங்கியதால் களப் பணியாளா்கள் பிட்சை தாா்ப்பாய் கொண்டு மூடினா். டாஸ் போட வாய்ப்பு கிட்டாத நிலையில், தொடா் மழையால் ஆட்டத்தை கைவிடுவதாக நடுவா்கள் அறிவித்தனா்.

இந்திய-பாக் ஆட்டத்துக்கும் சிக்கல்?

தொடக்க ஆட்டத்தில் நியூஸிலாந்தை, ஆஸ்திரேலியாவும், இலங்கையை இந்தியாவும் வென்றிருந்தன. ஞாயிற்றுக்கிழமை இதே மைதானத்தில் இந்தியா-பாக். அணிகள் ஆட்டம் நடைபெறவுள்ளது. எனினும் அடுத்த 24 மணிநேரத்துக்கு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்திய-பாக். ஆட்டமும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உள்ளது.

X
Dinamani
www.dinamani.com