மகளிர் உலகக்கோப்பை: ஸ்மிரிதி, ஹர்மன்ப்ரீத் ஆட்டமிழப்பு - இந்தியா தடுமாற்றம்!

இந்தியா - பாக். இடையே மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் ஆட்டம் பற்றி...
ரன் அவுட்டை தவிர்க்க பாயும் பிரதீகா ராவல்
ரன் அவுட்டை தவிர்க்க பாயும் பிரதீகா ராவல்AP
Published on
Updated on
1 min read

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்று போட்டியில், இந்தியா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இலங்கையின் கொழும்பு நகரிலுள்ள பிரேமதாசா விளையாட்டுத் திடலில் இன்று(அக். 5) பகல் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் 25 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் திரட்டியுள்ளது.

தொடக்க வீராங்கனைகளான ஸ்மிரிதி மந்தனா 23 ரன்களுக்கும், பிரதீக் ராவல் 31 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 19 ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியா ரன் குவிக்க தடுமாறி வருகிறது.

களத்தில் ஹர்லீன் டியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

Summary

ICC Women's Cricket World Cup match between India and Pakistan at Premadasa Stadium in Colombo, Sri Lanka

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com