மகளிர் உலகக்கோப்பை: பாக். எதிராகப் போராடி ரன் சேர்த்த இந்தியா! 248 ரன்கள் இலக்கு!

இந்தியா - பாக். அணிகளுக்கு இடையிலான மகளிர் உலகக் கோப்பை ஆட்டத்தில் போராடி ரன் சேர்த்த இந்தியா...
ரன் அவுட்டை தவிர்க்க பாயும் ஜெமிமா ரோட்ரிக்ஸ்
ரன் அவுட்டை தவிர்க்க பாயும் ஜெமிமா ரோட்ரிக்ஸ்படம் | AP
Published on
Updated on
1 min read

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் வெற்றி பெற 248 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கொழும்பு நகரிலுள்ள பிரேமதாசா விளையாட்டுத் திடலில் இன்று(அக். 5) பகல் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ரன்கள் திரட்டியது.

இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிரிதி மந்தனா 23 ரன்களுக்கும், பிரதீக் ராவல் 31 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 19 ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியா ரன் குவிக்க தடுமாறியது.

இக்கட்டான தருணத்தில் அணியை கரைசேர்க்கப் போராடிய ஹர்லீன் டியோல் 46 ரன்களும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதைத்தொடர்ந்து, 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.

Summary

ICC Womens World Cup 2025 India Women vs Pakistan Women, 6th Match Innings Break

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com