
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் தொடர்வதாக பாரதிய ஜனதா கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஞாயிற்றுக்கிழமை மோதின. இந்தப் போட்டியில், 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
முன்னதாக, பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் மூன்று முறை இந்தியா மோதியபோது, அந்த அணியின் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைக்குலுக்கவில்லை. இறுதி ஆட்டத்தில் வென்ற இந்திய ஆடவர் அணியினர், பாகிஸ்தான் அமைச்சர் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்துவிட்டனர்.
மகளிர் உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த போட்டிக்கு டாஸ் சுண்டியபோது, பாகிஸ்தான் கேப்டனுடன் கைக்குலுக்குவதை இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் தவிர்த்தார். போட்டியின் முடிவிலும் இரு அணி வீராங்கனைகளும் கைக்குலுக்கவில்லை.
இந்த நிலையில், மகளிர் அணி வெற்றி குறித்து பாஜக சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், “நீல நிற ஆடை அணிந்த பெண்கள், பெண்களின் சக்தியைக் காட்டியுள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது. தற்போதும் எப்போதும் இந்தியா வெற்றிபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.