பழம்பெரும் டெஸ்ட் கிரிக்கெட்டரான நீல் ஹார்வி இன்று தன்னுடைய 97-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இதன்மூலம், உலகின் வயதான வாழும் டெஸ்ட் கிரிக்கெட்டர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நீல் ஹார்வி, அப்போதைய கேப்டனான டான் பிராட் மேனின் இன்விஸிபிள்ஸ் அணியில் இருந்த உயிருடன் இருக்கும் ஒரே வீரர் இவர்தான். இந்த இன்விஸிபிள்ஸ் அணி 1948 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் 34 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்தது.
1949-50 ஆம் ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 5 போட்டிகளில் 4 சதங்கள் விளாசிய நீர் ஹார்வி, 660 ரன்கள் குவித்திருந்தார். அதேபோல, 1952-53 ஆம் ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 9 இன்னிங்ஸ்களில் 834 ரன்கள் குவித்திருந்தார்.
விக்டோரியாவில் பிறந்த இடதுகை ஆட்டக்காரரான நீல் ஹார், 1948 ஆம் ஆண்டு முதல் 1963 வரை 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 48.41 என்ற சராசரியுடன் 6,149 ரன்கள் எடுத்துள்ளார். 306 முதல் தரப் போட்டிகளில் 21,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.
அவர் தனக்கு 19 வயது (19 ஆண்டுகள் 121 நாள்கள்) இருக்கும் போதே 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள் விளாசியிருந்தார். 1948 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக மெல்பர்னில் நடைபெற்ற போட்டியில் 153 ரன்கள் விளாசியிருந்தார்.
1963 ஆம் ஆண்டு ஓய்வுக்குப் பின்னர், 12 ஆண்டுகள் ஆஸ்திரேலிய அணியின் தேர்வராகவும் பணியாற்றினார். அவருக்கு 2000 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஹால் ஆஃப் ஃபேம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
முன்னதாக, நீல் ஹார்வியில் சக வீரரான பில்லி பிரௌன் 2008 ஆம் ஆண்டு தன்னுடைய 95 ஆண்டுகள் 229 நாள்களில் மரணமடைந்தார். இவர் 1934 - 1948 ஆண்டுகளில் 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
தற்போது உயிருடன் இருக்கும் உலகின் வயதான கிரிக்கெட் வீரர்கள்
97 ஆண்டுகள் 000 நாள்கள் – நீல் ஹார்வி.
95 ஆண்டுகள் 334 நாள்கள் – ட்ரெவர் மெக்மஹோன்.
95 ஆண்டுகள் 290 நாள்கள் – வசீர் முகமது.
95 ஆண்டுகள் 221 நாள்கள் – சி.டி. கோபிநாத்.
95 ஆண்டுகள் 123 நாள்கள் – இயன் லெகாட்.
Summary
Oldest living Test cricketer Neil Harvey turns 97
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கன்னாட் பிளோஸ் ஹோட்டல் கட்டடத்தில் இருந்து குதித்து இளம் வழக்குரைஞா் தற்கொலை

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரஷித் கான் விளையாடுவாரா?

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாடுவேனா? டி20 கேப்டன் சூர்யகுமார் பதில்!
வீடியோக்கள்

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

நாளை தீர்ப்பு ...யாருக்குச் சாதகம் ? | TN Election Results 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு



