
இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டன் ஷுப்மன் கில் ரோஹித் சர்மாவின் அமைதியை தனக்குள் உள்ளீர்த்துக்கொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ரோஹித் சர்மா இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான அணியை பிசிசிஐ கடந்த அக்.4ஆம் தேதி அறிவித்தது. அதில், ஷுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
25 வயதாகும் ஷுப்மன் கில் டெஸ்ட்டில் ஏற்கெனவே கேப்டனாக நியமிக்கப்பட்டார். டி20யிலும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் உலகக் கோப்பை 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் கேப்டன் பொறுப்பை மாற்றியது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
அக்.19 முதல் 25ஆம் தேதி வரை ஆஸி. உடன் இந்தியா மோதுகிறது. இந்த அணியை வழிநடத்தும் புதிய கேப்டன் ஷுப்மன் கில் பேசியதாவது:
இந்நிலையில், பேட்டி ஒன்றில் ஷுப்மன் கில் பேசியதாவது:
ரோஹித் பாயின் (அண்ணாவின்) அமைதி, அவர் அணியில் ஏற்படுத்தியுள்ள நட்புறவை அப்படியே எனக்குள் உள்ளீர்த்துக்கொள்ள விரும்புகிறேன்.
ரோஹித், கோலி இருவரும் இந்தியாவுக்காகப் பல போட்டிகளை வென்றுள்ளார். வெகு சிலருக்கே இந்தளவுக்கான திறமையும் அனுபமும் இருக்கும். அவர்கள் நமக்கு வேண்டும்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டுக்குப் பிறகு ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டது. ஆனால், எனக்குச் சிறிது முன்பே தெரிந்துவிட்டது.
இந்தியாவை வழிநடத்துவது கௌரமானது. கம்பீருடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. வீரர்களை எப்படி பாதுகாப்பது, வேகப் பந்து வீச்சாளர்களை தயார்படுத்துவது குறித்து அதிகமாகப் பேசுவோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.