ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியை தொடங்கிய ரோஹித் சர்மா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியை இந்திய வீரர் ரோஹித் சர்மா தொடங்கியுள்ளார்.
rohit sharma
பேட்டிங் பயிற்சியில் ரோஹித் சர்மா (கோப்புப் படம்)படம் | ரோஹித் சர்மா (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியை இந்திய வீரர் ரோஹித் சர்மா தொடங்கியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா, அண்மையில் அவரது கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார். கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட போதிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்ம இடம்பெற்றுள்ளார்.

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரரான அபிஷேக் நாயருடன் இணைந்து ரோஹித் சர்மா கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ரோஹித் சர்மா பேட்டிங் பயிற்சி மேற்கொண்டபோது, உள்ளூர் வீரரான அங்கிரிஷ் ரகுவன்ஷியும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

38 வயதாகும் ரோஹித் சர்மா இந்திய அணிக்காக கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் விளையாடியிருந்தார். அந்தப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்று, நீண்ட காலமாக தொடர்ந்த ஐசிசி கோப்பைக்கானத் தேடலை முடிவுக்கு கொண்டு வந்தது. இதன் மூலம், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்று அசத்தியது.

சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துவிட்ட ரோஹித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் மட்டும் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். அவர் 2027 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் வரை இந்திய அணியில் இடம்பெற்று விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடர் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Indian batsman Rohit Sharma has started training for the ODI series against Australia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com