மகளிரணியின் எம்.எஸ். தோனி..! தோல்வியிலும் வரலாறு படைத்த ரிச்சா கோஷ்!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ரிச்சா கோஷ் பற்றி...
Richa Gosh
ரிச்சா கோஷ்படம்: பிசிசிஐ
Published on
Updated on
1 min read

இந்திய மகளிரணி கிரிக்கெட் வீராங்கனை ரிச்சா கோஷ் சிறப்பான பங்களிப்பு செய்ததுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியுடனான போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது.

முதலில் பேட்டிங் செய்த 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் பேட்டரும் விக்கெட் கீப்பருமான ரிச்சா கோஷ் 77 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார்.

ஒருநாள் போட்டிகளில் 1,000 ரன்களை கடந்து அசத்தினார். மேலும், நம்.8 இடத்தில் களமிறங்கி அதிகபட்ச ரன்களை குவித்து வரலாறு படைத்துள்ளார்.

அடுத்து விளையாடிய தெ.ஆ. அணி 48.5 ஓவர்களில் 252/7 ரன்கள் எடுத்து வென்றது. தெ.ஆ. சார்பில் 84 ரன்கள் எடுத்த நடினி கிளார்க் ஆட்ட நாயகி விருது வென்றார்.

இருப்பினும் இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் நாயகியாக கொண்டாடப்பட்டு வருகிறார். பலரும் இவரை மகளிரணியின் எம்.எஸ்.தோனி எனப் புகழ்ந்து வருகிறார்கள்.

Summary

Congratulations are pouring in for Indian women's cricketer Richa Ghosh for her outstanding contribution.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com