
இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா தனது புதிய காதலியின் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.
கடற்கரையில் காதலியுடன் எடுத்த புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளதால் அவரது பெண் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள்.
ஹார்திக் பாண்டியா (32 வயது) முன்னாள் டி20 அணியின் கேப்டனாக இருந்தார். காயம் காரணமாக அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஒரு ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா 2024, ஜூலை 18ஆம் தேதி தனது விவாகரத்தை அறிவித்தார்.
தற்போது, தனது புதிய காதலி மஹீகா சர்மா உடனான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் ’காதலி’ எனக் குறிப்பிடாவிட்டாலும் ஏற்கெனவே வதந்திகள் பரவி வந்த நிலையில் அது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யார் இந்த மஹீகா சர்மா?
தில்லியைச் சேர்ந்த மஹீகா சர்மா (31 வயது) மாடலாக இருக்கிறார். சில திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மிகப்பெரிய விளம்பர நிறுவனங்களுக்கான மாடலாக இருக்கிறார்.
இருவரும் தனித்தனியாக புகைப்படங்களைப் பகிர்ந்து வந்த நிலையில், தற்போது ஹார்திக் பிறந்தநாளில் ஒன்றாக பதிவிட்டுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.