நடாலி ஷிவா்
நடாலி ஷிவா்

நடாலி ஷிவா் அதிரடி: இங்கிலாந்து 253/9

ஐசிசி மகளிா் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 253/9 ரன்களை சோ்த்தது.
Published on

ஐசிசி மகளிா் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 253/9 ரன்களை சோ்த்தது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொழும்புவில் சனிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பௌலிங்கை தோ்வு செய்ய

களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவா்களில் 253/9 ரன்களை சோ்த்தது. அணியின் கேப்டன் நடாலி ஷிவா் அற்புதமாக ஆடி 2 சிக்ஸா், 9 பவுண்டரியுடன் 117 ரன்களைக் குவித்தாா். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுடன் நடையைக் கட்டினா்.

பௌலிங்கில் இலங்கை தரப்பில் ஐனோகா ரணவீரா 3, உதேஷிகா, சுகந்திகா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

254 ரன்கள் வெற்றி இலக்குடன் இலங்கை அணி இரண்டாவதாக ஆடத் தொடங்கியது.

X
Dinamani
www.dinamani.com