
ஆஸ்திரேலிய மகளிரணி கேப்டன் அலீஸா ஹீலி குழந்தைகளுடன் பேசிய விடியோ வைரலாகி வருகிறது.
அந்த விடியோவில் தங்கள் நாட்டு பழக்கத்தை குழந்தைக்குக் கற்றுக்கொடுக்கும் காட்சிகள் கவனம் ஈர்த்து வருகின்றன.
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகின்றன.
கடைசியாக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதிய போட்டியில் 330 ரன்களை சேஸ் செய்து ஆஸி. வரலாறு படைத்தது.
இந்தப் போட்டியில் அலீஸா ஹீலி 140 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகி விருது வென்றார்.
அடுத்த போட்டியில் ஆஸி. அணி வங்கதேசத்துடன் அக்.16ஆம் தேதி மோதுகிறது.
விசாகப்பட்டினம் கிரிக்கெட் திடலில் இதற்கான பயிற்சியில் ஆஸி. அணியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திடலில் ஆந்திரச் சிறுமிக்கு தங்கள் நாட்டின் வரவேற்புச் சொற்சொடரான ”குட் டே மேட்” என்பதைக் கற்றுத்தருகிறார்.
காமிரா முன்பாக அந்தச் சிறுமியும் அதை அப்படியே கூற மகிழ்ச்சியில் குதிக்கிறார். இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.