டெஸ்ட்: தென்னாப்பிரிக்காவின் வெற்றி நடைக்கு பாகிஸ்தான் தடை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் 93 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.
டெஸ்ட்: தென்னாப்பிரிக்காவின் வெற்றி நடைக்கு பாகிஸ்தான் தடை
Published on
Updated on
1 min read

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் 93 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.

2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் அந்த அணி முன்னிலை பெற்றது. அத்துடன், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான தென்னாப்பிரிக்கா தொடர்ந்து 10 ஆட்டங்களில் வென்ற நிலையில், அதை மேலும் தொடராமல் விடாமல் தடுத்திருக்கிறது.

கடந்த 12-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான், 110.4 ஓவர்களில் 378 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக இமாம் உல் ஹக் 93, சல்மான் அகா 93 ரன்கள் சேர்க்க, தென்னாப்பிரிக்க பெüலர்களில் சேனுரான் முத்துசாமி 6 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினார்.

பின்னர் தனது இன்னிங்ûஸ விளையாடிய தென்னாப்பிரிக்கா, 84 ஓவர்களில் 269 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. டோனி டி ஜோர்ஸி 104 ரன்கள் விளாச, பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதையடுத்து, 109 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ûஸ விளையாடிய பாகிஸ்தான், 46.1 ஓவர்களில் 167 ரன்கள் சேர்த்து முடித்துக் கொண்டது. பாபர் ஆஸம் 42 ரன்கள் எடுக்க, சேனுரான் முத்துசாமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இறுதியாக 277 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய தென்னாப்பிரிக்கா, 4-ஆம் நாளான புதன்கிழமை முடிவில் 60.5 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டெவால்டு பிரெவிஸ் 54 ரன்கள் சேர்க்க, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் நோமன் அலி, ஷாஹீன் அஃப்ரிதி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com