
பிரபல நியூசிலாந்து அணியின் வீரர் கேன் வில்லியம்சன் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் இணைந்துள்ளார்.
கடைசியாக 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கேன் வில்லியம்சன் விளையாடி இருந்தார். மொத்தமாக அவர் 79 ஐபிஎல் போட்டிகளில் 2,128 ரன்கள் எடுத்துள்ளார்.
கடந்த சீசனில் அவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. இந்நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் வியூக ஆலோசகராக கேன் வில்லியம்சன் இணைந்துள்ளார்.
இந்த அறிவிப்பினை அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா வெளியிட்டுள்ளார்.
2015- 2022 வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்தார். அதில் அவரது தலைமையில் 2016-இல் ஐபிஎல் கோப்பை வென்று தந்தார்.
2023-24இல் குஜ்ராத் டைட்டன்ஸ் அணியில் இருந்தார். போதிய வாய்ப்புகள் வழங்கப்படாமல் இருந்தார்.
கடந்த சீசனில் அவரை யாருமே ஏலத்தில் எடுக்கவில்லை. இந்நிலையில் லக்னௌ அணியில் ஆலோசகராக இணைந்துள்ளார்.
இது குறித்து அதன் உரிமையாளர் கூறியுள்ளதாவது:
செயல்திட்ட ஆலோசகராக கேன் வில்லியம்சனை எங்களது லக்னௌ அணியில் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சியானது. அவரை புதிய பொறுப்பில் வரவேற்கிறோம்.
கேன் வில்லியம்சனின் தலைமைப் பண்பு, வியூகத்திற்கான ஆலோசனை, போட்டியின் ஆழமான புரிதல், வீரர்களுக்கான உத்வேகமாக அவரை அணியில் இணைப்பது விலை மதிப்பற்றது எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.