
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் எக்ஸ் தளப் பதிவு ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுடனான மூன்று ஒருநாள், ஐந்து டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது.
இதில் ஒருநாள் போட்டிகள் வரும் அக்.19ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.
இந்தியாவின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர கிரிக்கெட் வீரருமான விராட் கோலி டி20, டெஸ்ட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தகவல்கள் தெரியவந்த நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் விராட் கோலி, “நீ உன்னையே கைவிடும்போதுதான், உண்மையாகவே தோற்றுவிடுகிறாய்” என்ற பழமொழியை பதிவிட்டுள்ளார்.
விராட் கோலியின் ரசிகர்கள் இதனைப் பார்த்து குழப்பத்தில் இருக்கிறார்கள்.
ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 302 போட்டிகளில் 14,181 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் உலகக் கோப்பை 2027 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இதில் பங்குபெற அவர் முனைப்புடன் இருக்கும் நிலையில் பிசிசிஐ பல்வேறு விதிகளை விதிப்பதாக விராட் கோலி ரசிகர்கள் ஆதங்கமாக கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.