
ரஞ்சி கோப்பையில் ரஜத் படிதார் தனது இரட்டைச் சதத்தினை முதல்முறையாக நிறைவு செய்துள்ளார்.
முதல்தர கிரிக்கெட்டில் இதுதான் அவரது முதல் இரட்டைச் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ரஜத் படிதார் (32 வயது) வலதுகை பேட்டராவார். இவர் ம.பி. அணிக்கு கேப்டனாக இருக்கிறார்.
ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஆர்சிபி அணிக்கு கேப்டனாக செயல்பட்டு, கோப்பையை வென்று தந்து அசத்தினார்.
தற்போது, ரஞ்சி கோப்பையில் முதல் போட்டியில் பஞ்சாப் அணி 232 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அடுத்து விளையாடிய ம.பி. அணி 519/8 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ரஜத் படிதார் 332 பந்துகளில் 203 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.
3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள இவருக்கு டெஸ்ட்டில் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.