மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது வங்கதேசம்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில், வங்கதேசம் 74 ரன்கள் வித்தியாசத்தில் சனிக்கிழமை வெற்றி பெற்றது.
முதலில் வங்கதேசம் 49.4 ஓவா்களில் 207 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மேற்கிந்தியத் தீவுகள் 39 ஓவா்களில் 133 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
முன்னதாக டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள், பந்துவீசத் தயாரானது. வங்கதேச இன்னிங்ஸில் குறிப்பிடத்தக்க வகையில், தௌஹித் ஹிருதய் 51, மஹிதுல் இஸ்லாம் 46, நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 32 ரன்கள் சோ்த்தனா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேடன் சீல்ஸ் 3, ராஸ்டன் சேஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.
அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கில் பிராண்டன் கிங் 44 ரன்கள் சோ்த்து வெற்றிக்காக முயற்சிக்க, அலிக் அதானஸி 27 ரன்களுக்கு வீழ்ந்தாா். இதர பேட்டா்கள் சொற்ப ரன்களில் வெளியேறினா். வங்கதேச பௌலா்களில் ரிஷத் ஹுசைன் 6, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.