மனைவியிடம் கேட்கவில்லை..! டெஸ்ட் அணிக்கு திரும்புவது பற்றி மிட்செல் மார்ஷ் ‘கலகல’ பேச்சு!

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்குத் திரும்புவது குறித்து ஒருநாள் கேப்டன் மிட்செல் மார்ஷ் பேசியிருப்பதைப் பற்றி...
மனைவி க்ரெட்டாவுடன் மிட்செல் மார்ஷ்.
மனைவி க்ரெட்டாவுடன் மிட்செல் மார்ஷ். Mitch Marsh insta
Published on
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இடம்பெறுவது குறித்து ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள், டி20 கேப்டன் மிட்செல் மார்ஷ் கலகலப்பாக பதிலளித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி நாளை பெர்த்தில் தொடங்குகிறது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

ஆஸ்திரேலிய அணியின் பிரதான ஒருநாள் கேப்டன் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளதால், டி20 கேப்டன் மார்ஷே ஒருநாள் அணியையும் வழிநடத்துகிறார்.

ஆல்-ரவுண்டரான மிட்செல் மார்ஷ் குறுகிய வடிவிலான, வெள்ளை நிறப் போட்டிகளான டி20, ஒருநாள் தொடர்களில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்.

மனைவி க்ரெட்டாவுடன் மிட்செல் மார்ஷ்.
மனைவி க்ரெட்டாவுடன் மிட்செல் மார்ஷ்.

தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடினார். இதனால், அடுத்து நவம்பரில் நடைபெறவிருக்கும் ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்குத் திரும்புவாரா? என கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இதுதொடபாக மிட்செல் மார்ஷ் பேசுகையில், “என்னிடம் முதல் போட்டிக்கான முதலிரண்டு நாள்களுக்கான டிக்கெட்டுகள் உள்ளன. என்னுடைய மனைவிடம் இன்னும் கேட்கவில்லை. நான் யோசித்தது அவ்வளவுதான்” என கலகலப்பாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மார்ஷ், சரியாக சோபிக்காததால் 5 வது போட்டியில் கழட்டிவிடப்பட்டார். அதன்பின்னர், அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வருகிற நவம்பரில் துவங்குகிறது. கம்மின்ஸும் காயத்தால் விலகியுள்ளார். இதனால், மிட்செல் மார்ஷுக்கு டெஸ்ட் கேப்டன் வாய்ப்பு கிடைக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Summary

Mitchell Marsh laughs off possible Ashes 2025 call-up: Haven't asked my wife yet

மனைவி க்ரெட்டாவுடன் மிட்செல் மார்ஷ்.
பாகிஸ்தான் தாக்குதலில் பலியானவர்களுக்கு ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் அஞ்சலி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com