176.5 கி.மீ./மணி வேகத்தில் பந்து வீசிய ஸ்டார்க்..! மிரண்டுபோன ரோஹித் சர்மா!

உலகின் மிக வேகமான பந்தை வீசிய மிட்செல் ஸ்டார்க் குறித்து...
JioStar Screengrab, Mitchell Starc.
ஜியோ ஸ்டார் திரைக் காட்சி, மிட்செல் ஸ்டார்க். படங்கள்: ஜியோஸ்டார், ஏபி.
Published on
Updated on
1 min read

உலகின் மிக வேகமான பந்தை ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வீசியுள்ளார்.

ரோஹித் சர்மாவுக்கு எதிராக இந்தப் பந்தை வீசியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பெர்த் கிரிக்கெட் திடலில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச்சைத் தேந்தெடுத்தது.

முதல் ஓவரில் முதல் பந்தை ஆஸி. வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், இந்தியாவின் ரோஹித் சர்மாவுக்கு வீசினார்.

இந்தப் பந்தின் வேகம் 176.5கி.மீ/ மணி வேகம் என வேகத்தக் காட்டும் கருவியில் காட்டியது. உண்மையில் ஸ்டார்க் இவ்வளவு வேகமாக வீசினாரா?

வேகத்தைக் கணக்கிடும் கருவியில் தொழில்நுட்ப கோளாறு எனக் கூறப்படுகிறது.

2003 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் 161.3 கி.மீ/மணி வேகத்தில் பந்துவீசி முதலிடத்தில் இருக்கிறார்.

மழையின் காரணமாக 26 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இந்திய அணி மோசமாக பேட்டிங் விளையாடி 136/9 ரன்கள் எடுத்தது.

டிஎல்எஸ் விதியின்படி 131 ரன்கள் இலக்காக நிரணயிக்கப்பட்டுள்ளது.

மிட்செல் ஸ்டார்க் 6 ஓவர்களில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து விராட் கோலியின் விக்கெட் எடுத்தார்.

Summary

IND vs AUS: World's fastest ball. Speed gun clocks Mitchell Starc at 176.5 kmph

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com