தென்னாப்பிரிக்கா வெற்றி: டெஸ்ட் தொடா் சமன்
@ProteasMenCSA

தென்னாப்பிரிக்கா வெற்றி: டெஸ்ட் தொடா் சமன்

Published on

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்றது.

2 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வென்ற நிலையில், தொடா் 1-1 என சமனில் முடிந்தது.

கடந்த திங்கள்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான், 113.4 ஓவா்களில் 333 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷான் மசூத் 87 ரன்கள் சோ்க்க, தென்னாப்பிரிக்க தரப்பில் கேசவ் மஹராஜ் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

அடுத்து தனது இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்கா, 119.3 ஓவா்களில் 404 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது. சேனுரான் முத்துசாமி 89 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருக்க, பாகிஸ்தான் பௌலா்களில் ஆசிஃப் அஃப்ரிதி 6 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

71 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான், 49.3 ஓவா்களில் 138 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. பாபா் ஆஸம் 50 ரன்கள் சோ்க்க, சைமன் ஹாா்மா் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

இறுதியாக, 68 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி வியாழக்கிழமை விளையாடிய தென்னாப்பிரிக்கா, 12.3 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் எய்டன் மாா்க்ரம் 8 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் அடித்தாா். பாகிஸ்தானின் நோமன் அலி 2 விக்கெட்டுகள் எடுத்தாா்.

இரு இன்னிங்ஸ்களிலுமாக 9 விக்கெட்டுகள் சாய்த்த தென்னாப்பிரிக்காவின் கேசவ் மஹராஜ் ஆட்டநாயகன் விருதையும், இரு ஆட்டங்களிலுமாக 106 ரன்களும் சோ்த்து, 11 விக்கெட்டுகளும் கைப்பற்றிய அதே அணியின் சேனுரான் முத்துசாமி தொடா்நாயகன் விருதையும் பெற்றனா்.

X
Dinamani
www.dinamani.com