

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (அக்டோபர் 27) அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14 முதல் குவாஹாட்டியில் தொடங்குகிறது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடாமல் ஓய்விலிருந்த கேப்டன் டெம்பா பவுமா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய வீரர்களே இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளனர். கேப்டம் டெம்பா பவுமா அணிக்குத் திரும்பியதால், டேவிட் பெடிங்ஹம் மட்டும் அணியில் இடம்பெறவில்லை.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம்
டெம்பா பவுமா (கேப்டன்), அய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டான், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரைன், டெவால்ட் பிரேவிஸ், ஸுபைர் ஹம்சா, டோனி டி ஸார்ஸி, கார்பின் போஸ்ச், வியான் முல்டர், மார்கோ ஜேன்சன், கேசவ் மகாராஜ், செனுரான் முத்துசாமி, ககிசோ ரபாடா, சிமோன் ஹார்மர்.
இதையும் படிக்க: ஆஷஸ் தொடரின் முதல் போட்டியிலிருந்து பாட் கம்மின்ஸ் விலகல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.