

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடந்த 3 சீசன்களாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டித் செயல்பட்டு வந்தார். அவர் கடந்த ஜூலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார்.
இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்தே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் அபிஷேக் நாயர் பயணித்து வருகிறார். அந்த அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் அவரும் அங்கம் வகித்துள்ளார். இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளராக கௌதம் கம்பீருடன் இணைந்து செயல்பட்டுள்ளார். சாம்பியன்ஸ் டிராஃபிக்குப் பிறகு, அபிஷேக் நாயருக்குப் பதிலாக சிதான்ஷு கோட்டக் இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டது குறித்து அந்த அணியின் தலைமை நிர்வாக இயக்குநர் வெங்கி மைசூர் பேசியதாவது: கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் அபிஷேக் நாயர் பயணித்து வருகிறார். கேகேஆர் அணி வீரர்களின் முன்னேற்றத்தில் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
ஆட்டம் குறித்த புரிதல், வீரர்களுடன் அவருக்கு இருக்கும் பிணைப்பு அணியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அபிஷேக் நாயரை பார்ப்பதற்கு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். அவரது தலைமையின் கீழ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அடுத்த அத்தியாயத்துக்குள் நுழைகிறது என்றார்.
இதையும் படிக்க: படிப்படியாக குணமடைந்து வருகிறேன்: ஷ்ரேயாஸ் ஐயர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.