
வெஸ்ட் தில்லி அணி தில்லி பிரீமியர் லீக்கில் முதல்முறையாக கோப்பையை வென்றது.
நிதீஷ் ராணா தலைமையில் வெஸ்ட் தில்லி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது.
தில்லி பிரீமியர் லீக் கடந்தாண்டு திடங்கிய உள்ளூர் டி20 தொடராகும். முதல் சீசனில் ஈஸ்ட் தில்லி ரைடர்ஸ் கோப்பையை வென்றது.
தற்போது, இரண்டாவது சீசனில் வெஸ்ட் தில்லி லயன்ஸ் அணி கோப்பையை வென்றது.
இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்ட்ரல் தில்லி 173/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக யுகல் சைனி 65, பிரன்சு விஜய்ரன் 50 ரன்களும் எடுத்தார்கள்.
அடுத்து விளையாடிய வெஸ்ட் தில்லி 18 ஓவர்களில் 175/4 ரன்கள் எடுத்து வென்றது. இந்த அணியில் அதிகபட்சமாக நிதீஷ் ராணா 79, ரித்திக் ஷோக்கின் 42 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.