ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த ஐக்கிய அரபு அமீரக கேப்டன்!

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த ஐக்கிய அரபு அமீரக கேப்டன் முகமது வாசிமை பற்றி...
ஐக்கிய அரபு அமீரகத்தின் கேப்டன் முகமது வாசிம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் கேப்டன் முகமது வாசிம்
Published on
Updated on
1 min read

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் கேப்டன் முகமது வாசிம் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

ஆசியக் கோப்பைத் தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் - ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றன.

இந்தத் தொடரில் இதுவரை பாகிஸ்தான் 2 போட்டிகளிலும், ஆப்கானிஸ்தான் அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஐக்கிய அரபு அமீரகம் - ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் ஆபார வெற்றி பெற்றது.

அதிரடியாக விளையாடிய ஐக்கிய அரபு அமீரகத்தின் கேப்டன் முகமது வாசிம், 37 பந்துகளில் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 67 ரன்கள் குவித்தார். இருப்பினும், அவரால் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

இந்தப் போட்டியில் 6 சிக்ஸர்கள் விளாசிய முகமது வாசிம், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்தார். அதாவது சர்வதேசப் போட்டிகளில் கேப்டனாக அதிக சிக்ஸர்கள் விளாசியவர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள்

  • முகமது வாசிம் (யுஏஇ) - 106*

  • ரோஹித் சர்மா (இந்தியா) - 105

  • இயான் மோர்கன் (இங்கிலாந்து) - 86

  • ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா) - 82

  • கடோவாக்கி ஃப்ளெம்மிங் (ஜப்பான்) - 79

  • ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து) - 69

Summary

UAE captain Muhammad Waseem breaks Rohit Sharma’s sixes record

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com