
ஐபிஎல் தொடர் தனக்கு பொருளாதார ரீதியில் தனக்கு பெரிதும் உதவியதாக அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான அமித் மிஸ்ரா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். இதன் மூலம் அவரது 25 ஆண்டுகால கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.
பொருளாதார ரீதியில் உதவிய ஐபிஎல்
ஐபிஎல் தொடர் பொருளாதார ரீதியில் பெரிதும் உதவியதாகவும், மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஐபிஎல் உதவியதாகவும் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பொருளாதார ரீதியில் ஐபிஎல் தொடர் எனக்கு மிகவும் அதிகமாக உதவியது. மேலும், நான் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஐபிஎல் தொடர் எனக்கு பெரிதும் உதவியது. சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமான 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடருக்குத் தேர்வானேன். அப்போது டி20 போட்டிகளுக்கு லெக் ஸ்பின்னர்களை பெரிதாக யாரும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், நான் டி20 போட்டிகளில் நன்றாக விளையாடுவதாகக் கூறி வீரேந்திர சேவாக் என்னை அவரது அணியில் விளையாட வேண்டும் எனக் கூறினார்.
நான் ஹாட்ரிக் விக்கெட் மற்றும் 5 விக்கெட்டுகள் எடுத்தேன். இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்து டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்படத் தொடங்கினேன். அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் லெக் ஸ்பின்னர்கள் என்பதை மக்கள் தாமதமாக அங்கீகரிப்பது வருத்தமளிக்கிறது. உதாரணத்துக்கு ஷேன் வார்னே மற்றும் அனில் கும்ப்ளேவை கூறலாம் என்றார்.
இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து 68 போட்டிகளில் விளையாடியுள்ள அமித் மிஸ்ரா 156 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.