இந்திய முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு!

இந்திய முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதைப் பற்றி...
அமித் மிஸ்ரா.
அமித் மிஸ்ரா.
Published on
Updated on
1 min read

இந்திய முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா அனைத்துவிதமாக கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக வியாழக்கிழமை அறிவித்தார். இதன்மூலம், கிட்டத்தட்ட அவரின் 25 வருட கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

இந்திய அணிக்காக 22 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் (76 விக்கெட்டுகள்), 36 ஒருநாள் போட்டிகள்(64 விக்கெட்டுகள்) மற்றும் 10 டி20 போட்டிகளில் (16 விக்கெட்டுகள்) அமித் மிஸ்ரா விளையாடியுள்ளார்.

2003 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் முத்தரப்பு தொடரில் அறிமுகமான அமித் மிஸ்ரா, அதன்பின்னர்., 2008 ஆம் ஆண்டில் பஞ்சாபின் மொஹாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானார்.

அதன் தொடர்ச்சியாக, 2013 ஆம் ஆண்டில் ஜிம்பாப்வேக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னாள் வீரர் ஜகவல் ஸ்ரீநாத்தின் சாதனையை சமன் செய்தார்.

2014 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் விளையாடிய மிஸ்ரா, 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து ஜொலித்துக் கொண்டிருந்த அமித் மிஸ்ரா, இந்திய அணிக்காக கடைசியாக 2017 ஆம் ஆண்டு விளையாடியிருந்தார்.

ஹரியாணாவைச் சேர்ந்தவரான மிஸ்ரா, ஐபிஎல் போட்டிகளில் தில்லி(2008), பஞ்சாப்(2011), ஹைதராபாத்(2013), லக்னௌ(2024) ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். 162 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 174 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும், இவர் 3 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல்லில் கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னௌ அணிக்காக விளையாடி ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.

Summary

Veteran Leg-Spinner Amit Mishra Announces Retirement From All Forms Of Cricket

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com