ஆசிய கோப்பைக்காக புதிய சிகையலங்காரம்..! வைரலாகும் ஹார்திக் புகைப்படங்கள்!

ஹார்திக் பாண்டியாவின் புதிய சிகையலங்காரம் குறித்து...
Hardik pandya
ஹார்திக் பாண்டியாவின் புதிய சிகையலங்காரம்.படங்கள்: இன்ஸ்டா / ஹார்திக் பாண்டியா.
Published on
Updated on
1 min read

ஆசிய கோப்பைக்கான ஹார்திக் பாண்டியாவின் புதிய சிகையலங்காரம் வைரலாகி வருகிறது.

ஆசிய கோப்பை டி20 போட்டிகள் வரும் செப்.9ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை டி20 போட்டிகளுக்காக இந்திய அணி வியாழக்கிழமை (செப்.4) மாலை துபை சென்றடைந்தது.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா இடம் பெற்றுள்ளார். முன்னாள் கேப்டனான இவர் காயம் காரணமாக கேப்டன்சியில் இருந்து கழற்றிவிடப்பட்டார்.

இந்தியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் தவிர்க்க முடியாத வீரராக இருக்கிறார்.

302 டி20 போட்டிகளில் 5,575 ரன்களும் 204 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

31 வயதாகும் ஹார்திக் பாண்டியா ஃபேஷனில் அதீத ஆர்வம் உடையவராக இருக்கிறார்.

பாண்டியாவின் உடைகள் அடிக்கடி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்க்கும். அவருக்கு பெண் ரசிகர்களும் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், தனது தலைமுடிக்கு செம்பழுப்பு நிற வண்ணத்தைச் சேர்த்துள்ள புதிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்தப் படங்கள் வைரலாகி வருகின்றன.

Summary

Hardik Pandya's new hairstyle for the Asia Cup is going viral.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com