
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடுவர்கள் அனைவருமே பெண்களாக நியமித்து ஐசிசி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியா, இலங்கையில் செப்.30ஆம் தேதி முதல் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் முதல்முறை...
மகளிர் கிரிக்கெட் போட்டிகள் பிரபலமடைந்து வரும் நிலையில் சமீபத்தில் அவர்களுக்கான பரிசுத் தொகையை ஐசிசி ஆடவர் அணிக்கு நிகராக உயர்த்தியது.
இந்நிலையில், மகளிருக்கான ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து நடுவர்களும் மகளிராக இருப்பார்களென அறிவித்துள்ளது.
கிரிக்கெட்டில் பாலின சமத்துவம் இருக்க வேண்டுமென இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நடுவர்களின் பட்டியலில் முன்னாள் இந்திய வீராங்கனைகளான விருந்தா ரதி, என். ஜனனி, காய்த்ரி வேணுகோபாலன், ஜிஎஸ் லக்ஷ்மி ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலின சமத்துவம் எனும் மைல்கல்...
இது குறித்து ஐசிசி தலைவர் ஜெய் ஷா கூறியதாவது:
நடுவர்கள் குழுவில் அனைவரையும் பெண்களாக பணியமர்த்தியது மிகப்பெரிய மைல்கல் மட்டுமல்லாமல் கிரிக்கெட்டில் பாலின சமத்துவம் என்பதின் சக்திவாய்ந்த பிரதிபலிப்பாக பார்க்கிறோம்.
இந்த வளர்ச்சி அடையாள மதிப்பைத் தாண்டியது. கண்ணால் காணத்தக்க, வருங்காலத்தில் பலரையும் உத்வேகம் கொள்ளதக்க வாய்ப்பாக அமையும் என்றார்.
இந்த உலகக் கோப்பையில் 8 அணிகள் மோதுகின்றன. நவ.2ஆம் தேதி இந்தப் போட்டிகள் முடிவடைகின்றன.
போட்டி நடுவர்கள்: ட்ரூடி ஆண்டர்சன், ஷான்ட்ரே ஃபிரிட்ஸ், ஜிஎஸ் லட்சுமி, மிஷேல் பெரேரா.
நடுவர்கள்: லாரன் ஏஜென்பேக், கேன்டேஸ் லா போர்டே, கிம் காட்டன், சாரா தம்பனேவானா, ஷதீரா ஜாகிர் ஜெஸி, கெரின் கிளாஸ்டெ, என். ஜனனி, நிமாலி ஃபெரேரா, கிளாரி பொலோசக், விருந்தா ரதி, சூ ரெட்ஃபெர்ன், எலோயிஸ் ஷெரிடன், காயத்ரி வேணுகோபாலன், ஜாக்குலின் வில்லியஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.