பிசிசிஐ-யின் அடுத்த தலைவரா? சச்சின் டெண்டுல்கர் விளக்கம்!

பிசிசிஐ-யின் புதிய தலைவராக சச்சின் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளதைப் பற்றி...
சச்சின் டெண்டுல்கர்..
சச்சின் டெண்டுல்கர்..
Published on
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பிசிசிஐ-யின் புதிய தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(பிசிசிஐ) தலைவராக இருந்த ரோஜர் பின்னி, தன்னுடைய 70 வயதை எட்டியதையடுத்து தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

2022 ஆம் ஆண்டில் தலைவராக நியமிக்கப்பட்ட ரோஜர் பின்னி, பிசிசிஐ சட்​ட​வி​தி​களின்​படி, 70 வயதைக் கடந்​தவர் பதவி​யில் தொடர முடி​யாது என்​ப​தால் இந்த முடிவை எடுத்திருந்தார்.

இதற்​கிடையே அடுத்த பிசிசிஐ தலை​வ​ராக இந்திய கிரிக்கெட் அணியின் உச்ச நட்சத்திரமாக இருந்த முன்னாள் வீரர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதில், சௌரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இதனை முற்றிலுமாக மறுத்திருக்கும் சச்சின் டெண்டுல்கர் இதுதொடர்பாக அவருடைய எஸ்​ஆர்டி ஸ்போர்ட்ஸ் மேலாண்மை நிறு​வனம் சார்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “பிசிசிஐ-யின் தலை​வர் பதவிக்கு சச்​சின் டெண்​டுல்​கரின் பெயர் பரிந்​துரைக்​கப்​பட்​டுள்​ள​தாகப் பரவிவரும் செய்​தி​களும், வதந்​தி​களும் எங்​கள் கவனத்​துக்கு வந்துள்ளன.

இதுபோன்ற ஆதாரமற்ற ஊகங்களையும், வதந்திகளையும் நம்பவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்​பை​யில் வருகிற 28 ஆம் தேதி பிசிசிஐ-யின் ஆண்டு பொதுக்​கூட்​டம் நடை​பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், புதிய தலை​வர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Speculations of Sachin Tendulkar being next BCCI President ‘unfounded’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com