
ஆசிய கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.
துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இதையும் படிக்க: ஆசிய கோப்பை: பாக். திணறல்! இந்தியா வெற்றி பெற எளிய இலக்கு!
எளிய வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 16 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 131 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ஆட்டம் முடிந்ததும், பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்குவதைத் இந்திய வீரர்கள் தவிர்த்தனர்.
இந்திய வீரர்கள் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இதனைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.