பாக். வீரர்களுடன் கை குலுக்காமல் மிடுக்குடன் நடைபோட்டு இந்திய வீரர்கள் சிறப்பான பதிலடி!

பாக். வீரர்களுடன் கை குலுக்காததற்கு என்ன காரணம்? -இந்திய அணி கேப்டன் பதில்
பாகிஸ்தான் கேப்டனுடன் கை குலுக்குவதை தவிர்த்துச் சென்ற சூர்யகுமார் யாதவ்
பாகிஸ்தான் கேப்டனுடன் கை குலுக்குவதை தவிர்த்துச் சென்ற சூர்யகுமார் யாதவ்AP
Published on
Updated on
2 min read

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் இந்திய அணியினர் கை குலுக்காததற்கு என்ன காரணம்? என்பதற்கு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதிலளித்துள்ளார்.

துபையில் நடைபெற்ற ஆசிய கோப்பை லீக் சுற்று ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், ஆட்டம் தொடங்குவதற்கு முன் டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் இந்திய வீரர்களை பந்துவீச பணித்தது.

இந்த நிலையில், டாஸ் சுண்டப்பட்ட பின் இரு அணி கேப்டன்களும் கிரிக்கெட் விளையாட்டின் பாரம்பரியப்படி கை குலுக்கி வாழ்த்து தெரிவித்துக்கொள்வதே வழக்கமாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டு கடந்து சென்றதைப் பார்க்க முடிந்தது.

அதன்பின் ஆட்டம் முடிவடைந்ததும், அதே பாணியில், இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர்.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கிரிக்கெட் விளையாட அரசும் பிசிசிஐயும் அனுமதித்திருப்பதற்கு பலதரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது. இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தோரும் பொதுச் சமூகமும் ஆர்ப்பட்டத்த்தில் ஈடுபட்டதையும் பார்க்க முடிந்தது.

இந்த நிலையில், ஆசிய கோப்பையில் இந்திய அணி வீரர்கள் செய்த செயல் சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியிருக்கிறது.

AP

இது குறித்து, ஞாயிற்றுக்கிழமை(செப். 14) நள்ளிரவு ஆட்டம் நிறைவடைந்தபின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசும்போது, “நமது அரசும் பிசிசிஐ-யும் ஓரணியில் பிணைந்து செயல்படுகின்றன.

நாங்கள் இங்கு விளையாடுவதற்காக மட்டுமே வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட்டேன். இதன்மூலம், அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளோம்.

ஒரு விளையாட்டு வீரராக வாழ்க்கையில் ஒருசில விஷயங்களை விளையாட்டு மரபைவிட முதன்மையானதாகக் கருத வேண்டும். பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் இருக்கிறோம். அவர்கள் குடும்பத்துடன் நாங்கள் இருக்கிறோம். அவர்களுக்கு துணையாக நிற்கிறோம்.

நான் ஏற்கெனவே சொன்னது போல, இந்த வெற்றியை நமது துணிச்சலான படை வீரர்களுக்கு, ’ஆபரேஷன் சிந்தூரில்’ ஈடுபட்ட வீரர்களுக்கு அர்ப்பணிக்கிறோம்” என்றார்.

சூர்யகுமார் யாதவின் இதே கருததியே இந்திய அணியின் பயிர்சியாளர் கௌதம் கம்பீரும் வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தலைவருமான மோசின் நக்வி சமூக ஊடகத்தில் கடும் எதிர்வினையாற்றியிருக்கிறார். அவர் தமது எக்ஸ் தளப் பக்கத்தில் என்ன தெரிவித்திருக்கிறார் தெரியுமா?

‘இன்று(செப். 14) விளையாட்டு மரபு இழக்கப்பட்டதை நினைத்துப்பார்க்கும்போது மிகுந்த வருத்தமாக இருக்கிறது.

விளையாட்டில் அரசியலை இழுப்பதென்பது விளையாட்டின் மாண்புக்கெதிராக இட்டுச் செல்லும்.

எதிர்காலத்தில் பெறப்படும் வெற்றிகளை அனைத்து அணிகளும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.

Summary

India captain Suryakumar Yadav did not shake hands with his Pakistani counterpart

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com