
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 292 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி சண்டீகரில் இன்று (செப்டம்பர் 17) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது.
ஸ்மிருதி மந்தனா சதம்
முதலில் விளையாடிய இந்திய அணி 49.5 ஓவர்களில் 292 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா சதம் விளாசி அசத்தினார். அவர் 91 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, தீப்தி சர்மா 40 ரன்களும், ரிச்சா கோஷ் 29 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் டார்ஸி பிரௌன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆஷ்லே கார்டனர் 2 விக்கெட்டுகளையும், மேகன் ஷுட், அன்னபெல் சதர்லேண்ட் மற்றும் தஹிலா மெக்ராத் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
293 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.
இதையும் படிக்க: ஆஸி.க்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.