
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகியுள்ளார்.
ஆஸ்திரேலிய மகளிரணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நிறைவடைந்த நிலையில், இன்று (செப்டம்பர் 17) இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வைரஸ் காய்ச்சல் காரணமாக இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
ஜெமிமா ரோட்ரிக்ஸுக்குப் பதிலாக அணியில் மாற்று வீராங்கனையாக தேஜல் ஹாசன்பிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: வைரஸ் காய்ச்சல் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ள ஜெமிமா ரோட்ரிக்ஸுக்குப் பதிலாக தேஜல் ஹாசன்பிஸ் மாற்று வீராங்கனையாக மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் தேர்வுக்குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் தொடங்கவுள்ளது. இந்த நேரத்தில் ஜெமிமா ரோட்ரிக்ஸுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு, அவர் முழுமையாக குணமடைந்து மீண்டும் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: அதிவேக சதமடித்த ஸ்மிருதி மந்தனா..! ஆஸி.க்கு எதிராக 3-ஆவது சதம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.