
இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக நம்.1 இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்திக்கு இந்தியா முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
வருண் சக்கரவர்த்தி மொத்தமாக 121 டி20 கிரிக்கெட் போட்டிகளில் 157 விக்கெட்டுகளை குவித்துள்ளார்.
குறிப்பாக, 20 சர்வதேச டி20 போட்டிகளில் 35 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
34 வயதாகும் வருண் சக்கரவர்த்தி கடந்த 2021-இல் இந்தியாவுக்கு டி20 போட்டிகளில் விளையாட தொடங்கினார்.
இந்தாண்டு முழுவதும் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 3 இடங்கள் முன்னேற்றம் கண்டு, முதல்முறையாக நம்.1 இடத்தைப் பிடித்துள்ளார்.
மூன்றாவது இந்தியராக இந்த சாதனை வருண் நிகழ்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசை
1. வருண் சக்கரவர்த்தி - 733 புள்ளிகள்
2. ஜேக்கப் டஃபி - 717 புள்ளிகள்
3. அகீல் ஹொசைன் - 707 புள்ளிகள்
4. ஆடம் ஸாம்பா - 700 புள்ளிகள்
5. ஆடில் ரஷித் - 696 புள்ளிகள்
மற்றுமொரு இந்திய வீரர் ரவி பிஷ்னோய் 2 இடங்கள் சறுக்கி 8ஆம் இடத்துக்கு கீழிறங்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.