
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 188 ரன்கள் குவித்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் வெள்ளிக்கிழமை நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஓமன் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்கிறது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 45 பந்துகளுக்கு 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியைப் பொறுத்தவரை இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.