
ஆப்கானிஸ்தான் உடனான போட்டிக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தை சுரங்கா வெல்லாலகே (54 வயது) திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனால், துபையில் இருந்து துனித் வெல்லாலகே இலங்கை புறப்பட்டார்.
ஆப்கானிஸ்தான் உடனான போட்டியில் இலங்கை வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்குத் தேர்வானது.
இருப்பினும் துனித் வெல்லாலகேவுக்கு மோசமான நாளாகவே அமைந்திருந்தது. ஏனெனில் அவர் வீசிய கடைசி ஓவரில் முகமது நபி 5 சிக்ஸர்களை வீசி 32 ரன்களை எடுத்தார்.
போட்டி முடிந்த பிறகு, அவரது இந்த மோசமான நாளை மேலும் கடுமையாக்கும்படி அவரது தந்தை இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது.
ஆல்-ரவுண்டரான துனித் வெல்லாலகே துபையில் இருந்து உடனடியாக விமானம் வழியாக இலங்கை புறப்பட்டார்.
சனிக்கிழமை இலங்கை அணிக்கு சூப்பர் 4 போட்டி இருக்கிறது. அதில் இவர் கலந்துகொள்வாரா என்பது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் எதுவும் கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.