
ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான முக்கியமான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 171 ரன்கள் திரட்டியுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீசியது. கடந்த ஆட்டத்தில் இந்திய அணியிடம் மோசமாக தோற்றதால் இம்முறை எப்படியாவது வென்று பழிதீர்க்கும் முனைப்புடன் அந்த அணியினர் களமிறங்கியுள்ளனர்.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் சஹீப்ஸாதா ஃபர்ஹான் 58 ரன்கள் சேர்த்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிவம் துபே 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து, 172 ரன்கள் இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.