ரிஷப் பந்த்தை துரத்தும் காயம்..! மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்டில் விளையாடுவாரா?!

இந்திய அணி துணை கேப்டன் ரிஷப் பந்த் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா? என்பதைப் பற்றி...
rishab pant
ரிஷப் பந்த்(படம் | பிசிசிஐ)
Published on
Updated on
1 min read

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த், சொந்த மண்ணில் நடைபெறும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்தத் தொடர் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி துவங்கி 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டு போட்டிகளும் அகமதாபாத் மற்றும் தில்லியில் நடைபெறுகிறது.

இந்தத் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்தில் நடைபெற்ற ‘ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி’ தொடரில் இந்திய அணி விளையாடியது.

மான்செஸ்டரில் ஜூலை மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது பந்து பலமாக காலில் பட்டதால், ரிஷப் பந்த்துக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இருப்பினும், அபாரமாக விளையாடிய ரிஷப் பந்த் 75 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தார். இந்தப் போட்டிக்குப் பின்னர், 6 வாரங்கள் அவர் ஓய்விலிருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், அவர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியிலும் பங்கேற்கமாட்டார் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவருக்குப் பதிலாக துருவ் ஜூரேல் விக்கெட் கீப்பராகப் பணியாற்றுவார் என்றும், மாற்றுவீரராக தமிழக வீரர் ஜெகதீஷன் சேர்க்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Rishabh Pant set to miss West Indies Test series!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com