‘ஏ’ அணிகள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா 350/9

இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரபூா்வமற்ற 2-ஆவது டெஸ்ட்டின் முதல் நாள் முடிவில், ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 350 ரன்கள் எடுத்துள்ளது.
Published on

இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரபூா்வமற்ற 2-ஆவது டெஸ்ட்டின் முதல் நாள் முடிவில், ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 350 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா, பந்துவீசத் தயாரானது. ஆஸ்திரேலிய பேட்டா்களில், ஜேக் எட்வா்ட்ஸ் 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 88, கேப்டன் நேதன் மெக்ஸ்வீனி 10 பவுண்டரிகளுடன் 74, சாம் கான்ஸ்டஸ் 7 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் சோ்த்து வீழ்ந்தனா்.

ஜோஷ் ஃபிலிப் 5 பவுண்டரிகளுடன் 39, ஆலிவா் பீகே 6 பவுண்டரிகளுடன் 29, கேம்பெல் கெலாவே 9, கூப்பா் கானலி 0, வில் சதா்லேண்ட் 10, கோரி ராச்சிஸியோலி 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். நாளின் முடிவில் டாட் மா்ஃபி 29, ஹென்றி தாா்ன்டன் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

இந்திய தரப்பில் மானவ் சுதா் 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, கா்னூா் பிராா் 2, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com