900 புள்ளிகளைக் கடந்த அபிஷேக் சர்மா..! டி20 தரவரிசையில் கோலி, சூர்யா சாதனை சமன்!

900 புள்ளிகளைக் கடந்த அபிஷேக் சர்மாவைப் பற்றி...
அபிஷேக் சர்மா...
அபிஷேக் சர்மா...
Published on
Updated on
1 min read

டி20 தரவரிசையில் 900 புள்ளிகளைக் கடந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளின் தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமைகளில் வெளியிடப்படுகிறது. அதன்படி, இந்த வாரத்துக்காக டி20 தரவரிசைப் பட்டியல் இன்று(செப்.24) வெளியிடப்பட்டது.

ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா, முதல் முறையாக ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் 900 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

உலகளவில் 6-வது வீரராகவும், இந்தியளவில் 3-வது வீரராகவும் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் விராட் கோலி(909), சூர்யகுமார் யாதவ் (912) ஆகியோருக்கு அடுத்தபடியாக அபிஷேக் சர்மா(907) புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

ஆசியக் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடிவரும் அபிஷேக் சர்மா, இதுவரை 4 போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதத்துடன் 174 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்தோர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

டி20 தரவரிசையில் 900 புள்ளிகளைக் கடந்த வீரர்கள்!

  • 919 - டேவிட் மலான்

  • 912 - சூர்யகுமார் யாதவ்

  • 909 - விராட் கோலி

  • 907 - அபிஷேக் சர்மா*

  • 904 - ஆரோன் பின்ச்

  • 900 - பாபர் அசாம்

  • 894 - டேவிட் வார்னர்

  • 886 - கெவின் பீட்டர்சன்

  • 885 - டிராவிஸ் ஹெட்

டி20 தரவரிசைப் பட்டியல்

  • அபிஷேக் சர்மா - 907 புள்ளிகள்

  • பில் சால்ட் - 844 புள்ளிகள்

  • திலக் வர்மா - 791 புள்ளிகள்

  • ஜோஸ் பட்லர் - 785 புள்ளிகள்

  • டிராவிஸ் ஹெட் - 771 புள்ளிகள்

  • சூர்யகுமார் யாதவ் - 729 புள்ளிகள்

  • பதும் நிஷங்கா - 728 புள்ளிகள்

  • டிம் செய்ஃபெட் - 725 புள்ளிகள்

  • டிம் டேவிட் - 676 புள்ளிகள்

  • டெவால்டு பிரேவிஸ் - 674 புள்ளிகள்

Summary

Abhishek Sharma joins India’s elite with 907 ICC T20I rating points behind Kohli and Suryakumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com