இரானி கோப்பை: ரஜத் படிதார் தலைமையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி!

இரானி கோப்பைக்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி குறித்து...
Rajat Patidar.
ரஜத் படிதார். படம்: எக்ஸ் / ஆர்சிபி
Published on
Updated on
1 min read

இரானி கோப்பைக்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ரஜத் படிதார் தலைமை தாங்குவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

கடந்த சீசனில் இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.

இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி என்றால் என்ன?

இந்தியாவின் உள்ளூர் போட்டியான ரஞ்சி கோப்பையில் வென்ற அணிக்கும் அதில் விளையாடாத மற்ற இந்தியர்களை வைத்து ரெஸ்ட் ஆஃப் இந்தியா என்ற அணிக்கும் ஆண்டுக்கு ஒருமுறை போட்டி நடைபெறும்.

இந்தப் போட்டிதான் இரானி கோப்பை என அழைக்கப்படுகிறது. 1960 முதல் இந்தப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த சீசனில் ரஞ்சி கோப்பை இறுதியில் கேரளமும் விதர்பாவும் மோதின. இந்தப் போட்டி டிராவில் முடிந்ததால் விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்ததால் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆர்சிபிக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ரஜத் படிதார் தலைமையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இரானி கோப்பை போட்டி வரும் அக்.1ஆம் தேதி தொடங்குகிறது. ஐந்து நாள் கொண்ட இந்தப் போட்டி கான்பூரில் நடைபெற இருக்கிறது.

ரெஸ்ட் ஆஃப் இந்தியா:

ரஜத் படிதார் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், ஆர்யன் ஜூயல் (கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யாஷ் துல், ஷேக் ரஷீத், இஷான் கிஷன் (கீப்பர்), தனுஷ் கோட்டியான், மானவ் சுதர், குர்னூர் ப்ரார், கலீல் அகமது, ஆகாஷ் தீப், அன்ஷுல் ஜம்போஜ், சர்ன்ஸ் ஜெய்ன்.

Summary

Rest of India squads announced under Rajat Patidar captaincy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com