
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனக்கு 6 மாதங்களுக்கு ஓய்வளிக்க வேண்டுமென இந்திய அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணி இன்று (செப்டம்பர் 25) அறிவிக்கப்பட்டது. 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டபோது, மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான இந்திய அணியை அறிவித்த அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியை யார் வழிநடத்தப் போகிறார்கள் என எந்த ஒரு ஆலோசனையும் நடைபெறவில்லை எனவும், இந்தியா ஏ அணியை சிறப்பாக வழிநடத்தியதால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் அணியை கேப்டனாக வழிநடத்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது எனவும் தெரிவித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து 6 மாதங்களுக்கு ஓய்வளிக்க வேண்டுமென ஷ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளதாக பிசிசிஐ செயலர் தேவஜித் சாய்கியா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷ்ரேயாஸ் ஐருக்கு பிரிட்டனில் முதுகுப் பதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதிலிருந்து அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது, அவருக்கு முதுகுப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் முழுவதுமாக குணமடைய நேரம் தேவைப்படுகிறது. ஓய்வு வேண்டுமென அவர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், அவர் இரானி கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதுகுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் 3 தமிழர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.