இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ஷேன் வாட்சனின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சர்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சனின் சாதனையை வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் முறியடிக்கவுள்ளார்.

Jofra archer

ஜோஃப்ரா ஆர்ச்சர் - படம் | AP

Published On :22 ஏப்ரல் 2026, 4:20 pm IST

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சனின் சாதனையை வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் முறியடிக்கவுள்ளார்.

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான ஆர்ச்சர் இதுவரை 6 சீசன்களில் விளையாடியுள்ளார். அதில் 5 சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும், ஒரு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

ஷேன் வாட்சனின் சாதனையை முறியடிப்பாரா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் அந்த அணிக்காக 84 போட்டிகளில் விளையாடி 67 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமை அவரையேச் சேரும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் ஷேன் வாட்சனுக்கு அடுத்தபடியாக, யுஸ்வேந்திர சஹால் (66 விக்கெட்டுகள்), சித்தார்த் திரிவேதி (65 விக்கெட்டுகள்), ஜோஃப்ரா ஆர்ச்சர் (65 விக்கெட்டுகள்) ஆகியோர் உள்ளனர்.

தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஜோஃப்ரா ஆர்ச்சர் இன்னும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் நிலையில், ஷேன் வாட்சனின் சாதனையை முறியடிப்பார். இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 53 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்ச்சர் 65 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் பட்சத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார்.

Summary

Fast bowler Jofra Archer is set to break the record held by former Australian player Shane Watson.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.