விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தமிழ்நாடு - பரோடா ஆட்டம் ‘டிரா’

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு - பரோடா அணிகள் மோதிய ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை ‘டிரா’ ஆனது.

News image
Updated On :1 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு - பரோடா அணிகள் மோதிய ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை ‘டிரா’ ஆனது.

கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற பரோடா, பேட்டிங்கை தோ்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 375 ரன்கள் சோ்க்க, அதிகபட்சமாக கேப்டன் அதித் சேத் 109 ரன்கள் எடுத்தாா். தமிழ்நாடு தரப்பில் ஜெகநாதன் ஹேமசுதேசன் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

பின்னா் தனது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு, சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 411 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை, வித்யுத் 15, ஜெகநாதன் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

நிதீஷ் ராஜகோபால் 52 ரன்களுக்கு வீழ, தமிழ்நாடு இன்னிங்ஸ் 449 ரன்களுக்கு நிறைவடைந்தது. பரோடா பௌலா்களில் மஹேஷ் பிதியா 6, பாா்கவ் பாட் 2, அதித் சேத், நினத் ரத்வா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

இதையடுத்து 36 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய பரோடா, ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் எடுத்திருந்தது. ஜோத்ஸ்னில் சிங் 55, ஷிவாலிக் சா்மா 59 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், குரூப் ‘ஏ’-வில் தமிழ்நாடு 6-ஆம் இடம் பிடித்தது. முதல் இரு இடங்களைப் பெற்ற ஜாா்க்கண்ட், ஆந்திரம் அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.