பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி..! தொடக்க வீரருக்கான இடத்தை உறுதிசெய்த இஷான் கிஷன்!

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் வென்ற இந்திய அணி குறித்து...
Ishan Kishan.
இஷான் கிஷன்.படம்: பிசிசிஐ
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் பிப்.7ஆம் தேதி முதல் இந்தியா, இலங்கையில் நடைபெறவிருக்கின்றன. முன்னதாக பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நேற்றிரவு நடைபெற்ற நவி மும்பையில் பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 241/6 ரன்கள் குவித்தது.

அடுத்து விளையாடிய தெ.ஆ. அணி 20 ஓவர்களில் 210/7 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தப் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மாவும் இஷான் கிஷனும் விளையாடினார்கள்.

தொடக்க வீரர்கள் இருவரும் 80 ரன்கள் வரை பார்ட்னர்ஷிப் அமைத்து, மற்ற வீரர்கள் பேட்டிங் விளையாட ரிடையர்ட் அர்ட் முறையில் வெளியேறினார்கள்.

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் மிகவும் சுமாராக விளையாடியதால், அவருக்கான இடத்தை இஷான் கிஷன் பிடித்துள்ளார்.

இந்தப் போட்டியில் இஷான் கிஷன் 20 பந்துகளில் 53 ரன்கள் எடுத்திருந்தார்.

உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டியான சையத் முஷடக் அலி தொடரை இவரது தலைமையில் ஜார்க்கண்ட் அணி முதல்முறையாக வென்று வரலாறு படைத்ததும் குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக் கோப்பையில் இந்தியா தனது முதல் போட்டியில் அமெரிக்காவுடன் மோதுகிறது.

Summary

Ishan Kishan seals top-order slot as India post 241/5 against South Africa in T20WC warm-up.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com